புதன், 18 நவம்பர், 2009
தொலைந்து போன என்னருமை கைபேசிக்கு
நான் உன்னை பெற்றேன்
இன்றென்ன பாவம் செய்தேன்
நீ எனை பிரிந்தாய்,?
வாழ்வில் ஒரு அங்கமாய்
என்னில் பாதியாய்
தனிமையில் தோழனாய்
உறங்க வைக்கும் அன்னையாய்
அதட்டி எழுப்பும் அண்ணனாய்
நாளை வேலை என்னவென்று
இன்றே வெளிப்படுத்தும் காரியதரிசியாய்
என் இரகசியங்கள்
பகிர்ந்து கொண்ட மெயக்காப்பாளனாய்
இரவும் பகலும் விழித்திருந்தாய்
என் வீட்டு நாய் போல
எனக்கான அழைப்புக்களையும்
வாய்ப்புக்களையும்
சலிக்காமல் கொண்டுவந்தாய்
உறவோடு ஒட்டி வாழ வைத்தாய்
என் விரல் தொட்ட
முதல் அன்னியம் நீ
உனக்கென நான் கொடுத்தது
ஒரு வேளை உணவே
உன் குரலோசை
எனக்கு குயில் பாட்டு
உன் சங்கீதமே
எனக்கு தாலாட்டு
என்ன தவம் செய்து
நான் உன்னை பெற்றேன்
இன்றென்ன பாவம் செய்தேன்
நீ எனைப் பிரிந்தாய்.
என்னவளே
முல்லை பூ சிரிப்பும்
சாயம் பூசா உதடும்
சங்கு கழுத்தும்
உடைக்கு ஒத்த இடையும்
வெள்ளை மயில் நடையும்
உன்னிடம் உள்ளதிங்கு
கதைகளில் படித்திருக்கிறேன்
கற்பனை தேவதைகளை
காண்கிறேன் இங்கொரு
பாவையை தேவதையாய்
அகில உலகை இரசிக்க
அனுமதி பெற்ற கவிஞன் நான்-இது
அபத்தமான உறவுக்கல்ல
அன்பான நட்புக்கே.
ஞாயிறு, 1 நவம்பர், 2009
கன்னியரின் விளையாட்டு
வெட்டிபய சந்தோசம்,
கண்ணாமூச்சி ஆட்டத்திலே
கண்கள் கட்டுவது போல்
கன்னியரின் விளையாட்டு
காளையரை கட்டி போடும்
முத்து பல்லழகி
முகம் பார்த்தா சிரிச்சிடுவா,
முத்தெடுக்க நீ நெனச்சா
மூழ்கித்தான் போய்ருவ .
தங்க உடம்புக்காரி
தகதகன்னு ஜொலிசிடுவா
உரசனும்னுநீ நெனச்சா
உசிருகே ஆபத்தாகும்,
மீன் குஞ்சு கண்ணுக்காரி
மை வைப்பா கண்ணுக்கு
வச்சது கண்ணுக்குத்தான்
ஆப்பு உனக்குத்தான்.
புதன், 28 அக்டோபர், 2009
அதிரடித் தீபாவளி
அழகில் நீ லட்சுமி வெடி
பேச்சில் நீ சீனி சரவெடி
சுறுசுறுப்பில் நீ தரச்சக்கரம்
பொங்கி எழுவதில் நீ பூச்சரம்
உயரத்தில் நீ இராக்கெட்டு
வலிக்காமல் என்னை அடிக்கும் சாட்டை
உன் நடை பாம்பு மாத்திரை
உடையோ பொறி மத்தாப்பு
வர்ணத்தில் நீ கலர் தீக்குச்சி
பொறுமையில் நீ நெருப்பு பத்தி
என் இதயத்தை பிளந்த அணுகுண்டு
மொத்தத்தில் நீ என்
அதிரடித் தீபாவளி.
புதன், 21 அக்டோபர், 2009
என்னவளே
உறவு கொண்டிருக்கிறேன்
உன்னிடம்,
உன்னை மிதித்து, மேல் ஓடி ,
விளையாடி, உருண்டு, உறங்கி ,
ஏன் உமிழ்ந்தும் கூட ,
திட்டியவரை தீர்த்து கட்ட
நினைக்கும் உலகத்தில்
உன் மேல் உமிழ்ந்தவனுக்கும்
இடமளிக்கும் உன்
பொறுமையை பார்த்தால்
பொறாமை எனக்கு,
ஒவ்வொரு மழையிலும்
உன் வாசனை நுகரும் பொழுது
என் பிறவிப்பயன் உணர்கிறேன்,
என் வீரம் கூட
உன் வழியே வருவது கண்டு
பெருமை கொள்கிறேன்
என் தாய் மண்ணே ,
உன்னை காதலிக்கா
மானிடரே இல்லை ,
நடக்கும் பல உயிர் பலிகளும்
உனக்காகத்தான் ,
உன்னையே பிரித்து
இது உனது,அது எனது
எனும் மானிடருக்கு
உறைக்கும்படியாக சொல்
அனைவரும் ஒருநாள்
உனதுள் என்று,
ஒ ,சுற்றதினரே ,
நான் இறந்த பின்
எரிக்காதீர்கள் என்னை ,
தயவு செய்து புதைத்து விடுங்கள்,
உயிரிழந்தாலும் ஆசை எனக்கு
என் தாய் மண்ணுக்கு உணவாக.
என்னவளே
புன்னகையில் வரவேற்று,
பூக்களின் வாசம் அளித்து ,
புது மணம் பரவச்செய்து ,-என்
வாழ்வின் சில பகுதிகளில்
வர்ணம் தீட்டிய தாரகையே,
என்றென்றும் வரவேற்கிறேன் -உன்னை
என் இறுதிவரைத் தோழியாக,
வெள்ளை காகிதங்கள்
காவியங்கள் ஆனது
உன் உருவம் பொறித்த பொழுது,
வஞ்ச புகழ்ச்சி வார்த்தைகள்
வர்ணனைகள் ஆனது -நீ
என் தோழியான பொழுது,
உன்னை குறிஞ்சி என மாட்டேன்
பன்னிரு வருட இடைவெளியில்-எனை
மறந்தாலும் மறந்து விடுவாய்,
நீ மல்லிகை அல்ல
மாலையில் வாடி விடுவதற்கு,
வாடா மல்லியும் அல்ல
கடுந்தோல் கொண்டவளாய் இருப்பதற்கு,
செந்தாமரையும் அல்ல
குளம் வற்றினால் உயிர் விடுவதற்கு,
முல்லையும் அல்ல -பிறர்
தயவில் படர்ந்து வளர,
என்றென்றும்
என் திசை நோக்கி
மலர்ந்திடும் நீ
என் வாழ்வின் "சூரியகாந்தி"
வெள்ளி, 16 அக்டோபர், 2009
என் வாழ்வில் ஒருவன்
வண்டி போல அண்டி வைத்து
வருவோர் போவோரை இழுத்து
வம்பிழுக்கும் வெட்டிப்பயலே ,
எளியோரை வலியோனாய் வதைத்தாய்
வலியென்று அனைவருக்கும் உண்டு
என்பதை நீ மறந்து -சிறு நகை புரிந்து
அடிதடவி ஆனந்தம் கண்டாய்
செவ்வாய்க்கு பின் புதனாம்
அதன் பின் விடுமுறையா உனக்கு
அதன் பெயர் ஆப் அல்ல -இனி
அவர் செயலே உனக்கு ஆப்பு,
சொல்வதற்கு உனது பெயர் முத்தாம்
உண்மையில் நீ ஒரு வெத்தாம்
வாங்கி கட்டிக்கொள்ளும்
வாழ்வு இனி உனக்கு சொத்தாம்,
கத்தி வைத்தவன் என்பதால்
கத்தி கத்தி பேசிவிட்டாய்
உன் கத்தல் கதறல் ஆகும் வரை
எங்கள் கனவு முடியப் போவதில்லை,
என்னவர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல
சட்டியில் இட்டு வதக்கி எடுக்க
ஆலமரங்கள் அவர்கள்
வேருக்கு மட்டுமல்ல
விழுதுகளுக்கும் பலம் அதிகம்,
புத்தி அற்றவர்கள் என நினைத்தாயோ
புரிந்து கொள்வாய் நீ ஒருநாளில்
உன்னை தாடியோடு அலை கழிக்க
நாள்க்குறித்தேன் - இனி
தலை குனிவாய், அடி பணிவாய்
என் எருமை தொப்பை செப்பே.
சனி, 10 அக்டோபர், 2009
சொல்லப்படாத காதல்
பேருந்து சன்னல் வழியே
பேதை உன்னை கண்டேன் தேவதையாய்
உனக்காக காத்து நின்ற நேரங்கள்
என் வாழ்வின் அற்புத விரயங்கள்
கொல்லும் கண்கள்
மாம்பழ சீப்பாய் உதடுகள்
குத்து விளக்காய் உடம்பு
குடும்ப பாங்கான பேச்சு
இருபது வயது வரை
எனக்காக துடித்த இதயம்
உன்னை காணும் நேரம்
கடினப்பட்டு இயங்கியது
மூச்சு காற்றில் வெப்பம் உருவாகி
ஓசோனை ஓட்டை செய்தது,
ஆண் நண்பர்களே இல்லா உனக்கு
என்னிடம் மட்டும் ஏன் ஈர்ப்பு
எனக்காக பதட்டம் கண்டாய்
எனக்காக பரிந்து பேசினாய்
எனக்காக உணவு கொண்டு வந்தாய்
உனக்கும் எனக்குமான உறவு
தெரியப்படுத்த படாத உணர்வு
சரியாக சொல்ல தெரியவில்லை
சரி என்றது என் மனது
இறுதிக்கால உயிர் பாலுக்கு ஏங்குவது போல
உன்னை காணும் ஒவ்வொரு தருணமும்
ஏங்கினேன் சொல்லிவிடலாமா என்று
காலம் கடந்து விட்டது
இன்று எனது இரகசிய குறியீடை
உனது பெயர்
இது ஒரு சொல்லப்படாத காதல்.
வியாழன், 8 அக்டோபர், 2009
கருவாச்சி காவியம்
பொட்டல்காடு வழிய புளிதிபறக்க
லாரி வண்டி வந்துச்சி
கல்லு மண்ணு ஏத்திகிட்டு
எங்க ஓருக்கு புது ரோடு போட
அத்தனை பேரு வேல பாக்க
அதுல ஒருத்தரு மட்டும் குழாயே மாட்டிகிட்டு
கொஞ்சம் கருப்புனாலும் சுறு சுறுப்பா
அப்ப அப்பே காப்பி தண்ணி , ஒர மோரு கொடுத்தேன்
அபடியே மனசையும் சேத்து
ஒரு நா பேய் மழைல நனைஞ்சவுகளே
வீட்டுக்குள்ள கூப்டு உக்காத்தி வச்சி
காப்பி தண்ணி கொடுக்க்கலாமுண்டு
அடுப்ப பத்தே வச்சா
அந்த குளிருக்கு அடுபுதன் பத்தலே
பத்தி கிச்சு எங்க மனசு
ஏதோ நினைப்புலே எசகு புசக்க ஆகிபுடே
அன்னைக்கே சொன்னாகே நீதான் என் உசிருனு
ரோடு வேல முடியிற வரைக்கும்
கயிறு கட்டாமலே வாழ்ந்தூம்
புருசம் பொஞ்சாதிய
கூடியே சீக்கிரமா குடும்பத்தோட வந்து
கூட்டிட்டு போறேன்னகே முனியாண்டி சத்தியமா
இந்த வரேன்னு பூனாகே
இன்ன வரைக்கும் வரலே , சேதி கூட
போனே ரெண்டர மாசத்துலே வாந்தி எடுக்க
மருத்துவச்சி பாத்துட்டு வயித்துலே ரெண்டு உசிருன்னா
பப்பாளிக்க கொடுத்து கலேசிடத்தன்
சொன்னகே ஊருக்குள்ளே
ஒரேயடியா மட்டேன்னுடேன்
என் உசிரும் உள்ள இருக்குன்னு
பொழுது நாளாச்சி
பெற்றதும் வளந்துபோச்சி
என்னவருட்டேருந்து சேதி வல்லே
என்னிக்காச்சும் ஒருநாள்
என் மன்னவரு வருவாருன்னு
நம்பித்தான் உசிரோட இருக்கேன்
இதுதான் உன் புள்ளைன்னு காட்டே
இருந்தும் கொஞ்சம் பதட்டம்தான் இருக்கு
என் மவராசன் எப்படி இருக்கரோன்னு .
வாழ்வோடு போராடு
ஆயுதத்தல்தான்
அன்னை இந்திரா கொல்லப்பட்டதும்
ஆயுதத்தல்தான்- நீ
ஆயுதம் தூக்க வேண்டாம் ,ஆனால்
தாக்குதலை தடுக்க பழகு
வாடும் பயிரை கண்டு வாடாதே-
அது வாழ வழி செய்து போராடு
புலி வாழத்தான் மானை கொல்கிறது
நீ புவியில் வாழ போராடு வாழ்வோடு.
புதன், 16 செப்டம்பர், 2009
ENNAVALE
காதல்தான் நட்பாகுமா
என் பள்ளி வாழ்வில்
பெண்ணொருத்தி நுழைந்தாள்
சிரித்து பேசினாள்
குழந்தை போல் கொஞ்சினாள்
என் கேலி பேச்சுகளுக்கு
செல்லமாய் சினம் கொண்டு
வேகமாய் பாவித்து
மெதுவாய் அடித்தாள்
என் வாழ்வில் குறிஞ்சி
பன்னிரு வருட குறிஞ்சி அன்று
பன்னிரண்டாம் வகுப்பு குறிஞ்சி ஆம்
அவள் மீது கொண்ட நட்பு
மாறியதுகாதலாய்
இது ஒரு தலை காதலோ என்றெண்ணி
இருதலை கொல்லி எறும்பாய் தவித்தேன்
இறுதியில் காதலை சொல்ல முனைந்து
கடிதத்தோடு சென்றபோது
அவள் கண் மறைவினில் நான்
என் காதருகே அவள் குரல்
என் தோழன் எனக்காக
எதையும் செய்வானென்று
இப்படி பாலான நட்பை
பாழாக்க விரும்ப மனமில்லை எனக்கு
எழுதிய கடிதத்தை கிழித்து எறிந்துவிட்டு
இனிதாய் பேசினேன் என் தோழியிடம்.
ENNAVALE
என்னிடம் வந்தது குறுஞ்செய்தி
இரவில் கனவில் நானா என்று
ஆவலாய் கேட்டாள்என்னவள்
கனவை திரும்பி பார்ப்பதும் இல்லை
கண்ட கனவு நிற்பதும் இல்லை
உன்னை தவிர வேறு யாரென்று
உரிமையோடு பொய் சொன்னேன்
உறவை பிணைக்கும் நோக்கத்திலே
சொல்வேன் ஆயிரம் பொய்கள் கூட
என்னவளுக்காக.
வெள்ளி, 11 செப்டம்பர், 2009
amma
என் முதல் கவிதை
உந்தன் கரு எழுதுது ஒரு கவிதை
உன்னை கருவாய் வைத்து
கல் சிலையானால் சிற்பி பெருமை கொள்வான்
என்னை கருவில் இருக்கும் போதே கொஞ்சினையே
பிறர் செய்யும் தருமம் கூட புண்ணியம் எதிர்பார்த்துதான்
உன் புண்ணியம் கூட என் புன்னகைக்கு தானே
என் அம்மா .
ENNAVAL
பிறந்த மண்
வளர்த்த தமிழ்
வாழ்கை தோழிகள்
வரபோகும் மனைவி
என்னவள்களாய்
இனி வரும் கவிதைகளில்
புதன், 9 செப்டம்பர், 2009
எனக்கு, ennavlidamirunthu
புகைப்பதை நிறுத்திவிடு
உன்னுடல் கெட்டுவிடும் என்றோ
உறவாடும் சமயம்
இடயுறாய் இருக்கிறதென்றோ
இதை நான் வற்புறுத்தவில்லை
ஒரு வகையில்
சிகரட்டும்
எனக்கு சக்களத்தி தன்
எனக்கு மட்டுமே
சொந்தமான இதழ்களுடன்
அவ்வபோது அனைத்து
உறவாடுவதால்.
வெள்ளி, 4 செப்டம்பர், 2009
ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009
ENNAVALE
pathivu seitha nerethil
en sinthanaiyai
thavaravitten
un kanvizi
siraiyil sikki konden
thavarilaitha enaku
thabbika manamillai
atharkake vendam
marana thandanai
mudinthal kodu
aayul thandanai
En aayul muluthum
Unnudan irukkumpadiyake.
ENNAVALE
kadithangal kidaithga
kuppai thotti kooda
kadhalikirathaam Ennai
Nee Eppothu?
